Interactive Intro | Developer's Version | High level Schema | End user's version
வரலாறு எப்பொழுதும் எனக்கு பிடித்தமான பாடம்.அதன் பக்கங்கள் சில சமயங்களில் அதிசயங்களால் நிரப்பட்டிருக்கும்.சில சமயங்களில் புருவங்களை உயர்த்தவைக்கும் ஆச்சர்யங்கள்.சில சமயம், மெய் சிலிர்க்கவைக்கும் அதிசயங்கள்.ஆதாரமில்லாத பொய்கள்.பகுத்தறிவிற்கு எட்டாத முரண்பாடுகள்.இன்னும் சில சமயங்களில் நம்பமுடியாத ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் என்கிற விசயங்களும்.
அத்தகைய நிகழ்வுகள் சில,நிகழ்காலத்திலும் நடக்கும்.யாராவது கூற கேட்டிருப்போம்."அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லயே" என்று நாம் கூறுபவரிடம் சண்டையே போடுவோம். இன்னும் அரிதாக நாமே சாட்சியாக இருக்க வேண்டியிருக்கும்."இப்டி கூடவா நடக்கும்?என் கண்ணு எதுவும் பிரச்சனையா?" என நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம்.
இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேனா , அடுத்து நீங்க படிக்கபோறதும் இதுமாதிரியான ஒரு நம்பமுடியாத நிகழ்வுதான்.ஆனால் நீங்க நம்பித்தான் ஆகனும்.
ஆமா. எனக்கு கிலியாணம். இல்ல.இல்ல.. எனக்கு கலியாணம்.
நம்பமுடியலேல..அப்டித்தான்.ஒன்னு உங்களுக்கு சிரிப்பு வரும்.,இல்லேனா விசயத்த செமிக்கமுடியாம அஜீரணம் வரும்.'எப்டிப்பா ., நம்பமுடியலியே' அப்டினு தோணுதா? வேறவழி இல்ல.நம்பித்தான் ஆகனும்.
'இவனுக்கு யாரு பொண்ணு குடுப்பா? 'ன்னு உங்க மண்டையுல Question ஓடுதுல. உங்களுக்கு மட்டுமில்ல. எனக்கும் அதே Question ஓடுச்சு.நம்மள பார்த்தாலே 10 Step பின்னாலலே ஓடுவாங்க. அப்புறம் எப்டினு நானும் நிறையாவே யோசிச்சேன்.Answer simple - பொண்ணு பார்க்க நான் போவல.அதான் Matter.பார்த்துருந்தா சரித்திரம் மாறிருக்கும்ன்னு நினக்கிறேன்.அந்த Gap ல்ல பொண்ணு மாட்டிகிச்சு.அதான் GIMP , Photoshop,Computer Graphics ன்னு ஏகப்பட்ட விசயம் இருக்குதே. புகுந்து விளையாண்டுடாங்கே நினக்கிறேன்.
அதனால என்னா சொல்லவர்ரேன்னா நீங்க எல்லாம் கலியாணத்துக்கு வந்துரணும்.என்னாது? இத கேட்டதே தலை சுத்துது. இந்த கொடுமைய கண்ணால நேர்ல வேற வந்து பார்க்கனுமாங்கிறீங்கள? எனக்காக இல்லேனாலும் பாவம்,அந்த பச்ச மண்ணு,அப்பாவி அபல பொண்ணுக்காகவாவது நீங்க கண்டிப்பா வரனும். அங்க வந்து அந்த பொண்ணுக்கு நாலு ஆறுதலும் எனக்கு கொஞ்சம் Advice பண்ணனும்.
யார்ப்பா அது? இடம் எங்கனு கேக்குறது? வேற எங்க? மதுரை தான் வாழ்ந்தாலும்,வீழ்ந்தாலும் நம்ம மதுர தான்யா நமக்கு சொர்க்கம். மதுரய சுத்துன கழுத வெளிய எங்கயாவது போகுமா? என்னாது சரக்கு எங்கயா? அதான பாத்தேன்.இவ்வளவு ஆர்வம இடத்த கேக்குறப்பவே ஒரு Doubt. சரக்கு, முறுக்கு,Side-Dish எல்லாம் முதநாள் Night. நானா? நான் வரமாட்டேன்பா. ஏன்னா , நம்மாதான் இனி வாழ்க்கை பூராம் அடிக்கனும்.
பொண்ணு பேரா? சரணம்ப்பா!இல்ல இல்ல., சரண்யாப்பா ! Tongue Slipஆயிருச்சு
Back to point. அதனால பஸ்ஸோ, ரயிலோ இல்ல ஏரோபிளனோ, Withoutஓ, படிக்கட்டோ வந்து சேந்துரணும்.
தேதி. ஆமா., மறந்ட்டேன்., June 1, 2014 ப்பா! இம்புட்டு சொல்லியும் இல்லப்பா அன்னிக்கு குழந்தக்கி பால்வாடில Functionஇருக்குது., Officeல முக்கியமான சோலி இருக்கு.,முதலாளி திட்டுவாரு அப்பிடாலாம் சொல்லகூடாது ., சொல்லமுடியாது.
ஏன்னா , நான் நல்ல Check பண்ணிட்டேன் ., அண்ணக்கி ஞாயிற்றுக்கிழமை.பந்த்,கிந்த் எதுவுமில்ல.
வந்துதான் ஆகனும்.Okay? Done.
இப்பொழுதும் எப்பொழுதும் , உங்க
அன்பும் நட்பும் (அப்பப்ப கொஞ்சம் கைமாத்தும்) வேண்டி,
மு.கேசவன்,
kesavan.info
History is my all-time favorite apart from Astro-Physics. I love it. It's always filled with miracles. Sometimes wonders that makes eyebrows up. Even some other times, makes horripilate and get Goosebumps. other times with proof less taradiddle stories.Contradicts with commonsense , sometimes. And even sometimes unbelievable , but have to believe such stuffs.
Such stories might happen in present too. Someone will narrate from their own experience. 'No chance' - that's what we might argue with the person who's narrating the event. At worst scenario, we've to be the eye witness for such things. We question our self about the correctness of eye. May we've to go for ophthalmologist to double check our self.
Why am I telling these things is because the next stuff , you gonna read also such an unbelievable thing. But you've to believe.
Yes! I'm going to fall down ! No.. it's not waterless well. It's married life.(Not much difference, I hope. The earlier , the better) Yes. I gonna get married...
Hard to believe? yes. You'll laugh loud now else unable to digest the same. Wondering 'How it can be' ? No other option. You've to believe.
Who'll gonna marry this idiot? Have such million dollar questions running in your mind? Not only for you. For me too ! Girls will fly over 100 feet apart of me even at the first itself. Then how this gonna happen. I try hard to find myself. Answer - Simple. I wasn't there , when everyone(including the girl) decide this. If she have had look at me , history might be changed. She got trapped in that gap. yeah! They'd some better morphing tools like GIMP , Photoshop and much computer graphics. They did it well with my photos , I think so.
So, what I'm coming to say now is , you've to be there at the marriage. What? I'm even unable to digest this stuff. How I should eyewitness this ? No such statements , Boss. Not for me , at least for the innocent poor girl. You've to appear for her. Console her with few words. Advise me something (Optional)
Who's that ? asking for location ? nowhere ., it's always Madurai. Rise or Down ! Madurai is our land. Our heaven. Who wish to out of Madurai? No one. What ? party ? That's the matter , when you seek on location. Beer , snacks and much more on the marriage eve , buddy. Me? No boss. I'm not join with you that (single) day. I've to have them life loong.
the girl ? she's saranya ! poor and innocent.
Back to point. Bus or train or flight, Without or standby , you've to join us.
date ? . oops! I forget. It's by June 1, 2014 Even after telling this amount stuff, and you gonna say , my kinder garden kids have final exams , my boss gonna kill me , I'm the pillar to hold the project , there's no excuse. No way
B'coz ,I verified thoroughly.It's Sunday (and funday) . No state , central strikes too.
No other option. You've to make it Okay? Done.
Now and ever , looking for your love and friendship ( often some dollars and rupees),
kesavan.muthuvel
kesavan.info
|
Return to Kesavan Muthuvel's home page. Please send comments on these web pages to hi@kesavan.info (or) Feedback here CopyLeft (Ͻ) 2008 - 2023 Kesavan Muthuvel More on CopyLeft |